சினிமா / TV

இதுதான் பேய் படமா? ஏமாற்றத்தில் திரும்பும் ரசிகர்கள்! டிடி நெக்ஸ்ட் லெவலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

வெளியானது டிடி நெக்ஸ்ட் லெவல்

சந்தானம் கதாநாயகனாக நடித்து பிரேம் ஆனந்த் இயக்கிய “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் சந்தானத்துடன் செல்வராகவன், கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். 

இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் தொடர்ச்சிதான் இத்திரைப்படம்.  இன்று இத்திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் காலை முதல் காட்சி சென்று பார்க்கத் தொடங்கினர். “தில்லுக்கு துட்டு”, “டிடி ரிட்டன்ஸ்” போன்ற திரைப்படங்களை  போலவே இத்திரைப்படமும் காமெடி ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

பேய் படம்னு நினைச்சி வந்தீங்கனா அவ்வளவுதான்!

இந்த நிலையில் இன்று காலை முதல் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலர் யூட்யூப் சேன்னல்களிடம் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது ஒரு பெண் ரசிகை, “இந்த படத்தை குழந்தைகள் ரசித்து பார்ப்பார்கள். ஆனால் பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் போன்றோருக்கு இத்திரைப்படம் செட் ஆகாது. பேய் படம் என்று நினைத்து வந்தீர்கள் என்றால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா விமர்சகர்கள் பலரையும் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்கள். எனினும் படம் காமெடியாக இருக்கிறது” என கூறினார். 

மேலும் பேசிய மற்றொரு ரசிகர், “படம் நன்றாகவே இல்லை. ஆனால் நகைச்சுவையாக இருக்கிறது, ஒரு முறை பார்க்கலாம்” என கூறினார். இது போல் முதல் காட்சி கொஞ்சம் கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன. 

Arun Prasad

Recent Posts

அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!

மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…

15 hours ago

உங்களுக்கும் மாட்டு கொட்டகைதான்… பாமகவை எச்சரிக்கும் வானதி சீனிவாசன்!!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…

16 hours ago

வெற்றிமாறன் படத்தில் குட் நைட் மணிகண்டன்? சிம்பு படத்தை குறித்து வெளியான மாஸ் தகவல்!

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…

16 hours ago

இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை? ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் கூலி படக்குழு!

காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…

17 hours ago

மிருகத்தனமான தாக்குதல்… கொலை செய்பவர் கூட இப்படி செய்ய மாட்டார் : அஜித் மரணம் குறித்து நீதிபதிகள் வேதனை!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…

18 hours ago

சினிமாவில் விஜய், அஜித் இடங்கள் காலி ஆகாது : பிரபலம் சொன்ன கருத்து!

திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…

18 hours ago

This website uses cookies.