திடீர் என்று YouTube-இல் Trend ஆகும் தேவயானி பாடல் ! Oh இதான் காரணமா ?

13 September 2020, 12:00 pm
Quick Share

இந்த உலகத்துல, அதுவும் சினிமா உலகத்துல எப்போ என்ன ட்ரெண்ட் ஆகும் என்று யாருக்கும் தெரியாது, கடவுளுக்கு கூட தெரியாது பா. திடீர்னு பார்த்தா ஆஹான் என்று ஒன்னு டிரெண்ட் ஆகும், அதன் பிறகு மெட்டி ஒலி கோபி திடீர் என்று டிரெண்ட் ஆவார், சமுத்திரகனி டிரெண்ட் ஆவார். இதையெல்லாம் என்ன டிசைன் என்று யாருக்கும் தெரியாது.

அந்த வகையில் தற்போது அஜித் பார்த்திபன் தேவயானி நடித்த “நீ வருவாய் என” படத்தில் இடம் பெற்ற “பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா” என்ற பாடல் திடீர் என யூடியூபில் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது.

Comedy என்ன என்றால், யூ-ட்யூபில் அந்த பாடலில் பார்வையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு மலமலவென உயர்ந்துள்ளது.

இதன் பின்னாடி என்ன வரலாறு இருக்கும் என்று தேடினால், அடங்கோ டேய் இதுக்கு தான் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கா என்று தலையில் அடித்து கொள்ளும் வகையில் இருக்கிறது அதற்க்கான காரணம்.

சமூக வலைதளங்களில் அடல்ட் காமெடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடல் வரிகளுடன் சில கெட்ட வார்த்தைகளை இணைத்து ஒரு மீம் வெளியாக இந்த பாடல் ட்ரெண்டிங் லிஸ்ட்டுக்குள் வந்துள்ளது. அதுதான் இந்த திடீர் Trendingக்கு காரணமாம்.

Views: - 0

0

0