ராயன் பார்த்துட்டேன்.. தனுஷூற்காக ஒருமுறை பார்க்கலாம்; பிரபலம் கொடுத்த ரிவ்யூ..!
Author: Vignesh26 July 2024, 4:21 pm
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்று வெளியான ராயன் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக ரசிகர்கள் ராயன் படம் மாசாக இருப்பதாகவும், தனுஷிடம் வெற்றிமாறனை பார்க்க முடிகிறது என்றும், ராயன் பட டைட்டில் கார்டு அசத்தலாக இருக்கிறது. தலைவர் ரசிகன் என்பதை தனுஷ் நிரூபித்து விட்டார்.
மேலும் படிக்க: பிரபல நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட்?.. தேவயானியின் தம்பி நகுல் குறித்து புட்டு புட்டு வைத்த உதவி இயக்குனர்..!
இயக்குனராக தனுஷ் மீண்டும் ஜெயித்து விட்டார். ராயன் படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர். தனுஷின் அறிமுக காட்சி இடைவேளை நடிப்பு எல்லாம் வேற லெவல். கர்ணன் படத்தை விட ராயனுக்கு பெரிய அளவில் ஒப்பனிங் இருக்கப்போகிறது.
இந்த ஆண்டில், இதுவரை வெளியான படங்களை விட அதிக வசூல் செய்த படமாக ராயன் இருக்கப் போவதாக ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தனுஷ் அண்ணா என்று தெரிவித்து வருகின்றனர்.
இப்படி பலரும் இந்த படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை கூறிவரும் நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு இந்த படத்தை பார்க்கும் போது ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தின் கதை மாதிரி இருக்கிறது என்றும், பின்னர் துரோகம் துரோகத்தால் நடக்கும் கொலைகள் அந்த கொலைகளுக்கான காரணத்தை தெளிவாக சொல்ல தனுஷ் தவறிவிட்டார்.
அதை சரியாக சொல்லியிருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும். இதையெல்லாம், தாண்டி இந்த படத்தை தோளில் சுமந்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். இப்படத்தில், வரும் உசுரே நீ என்னும் பாடல் மிக அருமையாக இருக்கிறது. வேண்டுமென்றால், தனுஷ்காக ராயன் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.