மீண்டும் தனுசுக்கு ஜோடியான சோனியா அகர்வால்.. வெளியான First Look போஸ்டர்.. இது எப்போ நடந்துச்சு?..

Author: Vignesh
14 June 2024, 5:21 pm
dhanush
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Dhanushs-Captain-Miller

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

dhanush-raayan

மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில், தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.

dhanush-raayan

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

இந்நிலையில், தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படங்கள் பல உள்ளன. அதில், ஒன்றுதான் டாக்டர்ஸ் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இப்படத்தில் தனுசுடன் இணைந்து சோனியா அகர்வால் நடிக்க விருந்துள்ளார். போஸ்டர் போட்டோஷூட் நடந்துள்ள நிலையில், படம் ட்ராப்பாகியுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படத்தின் போஸ்டர்.

dhanush
dhanush
Views: - 109

0

0