தனுஷின் “தி க்ரே மேன்” ஹாலிவுட் படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அறிவிப்பு..!

Author: Mari
8 January 2022, 4:30 pm
Quick Share

துள்ளுவதோ இளமையில், என்ற படத்தில் நடித்த போது, ‘நீ எல்லாம் கதாநாயகனா’ என்ற பலரின் விமர்சனங்களையும், வென்று இன்று உலகளவில் முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த அளவிற்கு உயர்ந்தள்ளதற்கு, அவரின் விடாத முயற்சியே காரணம் என சினிமா துறையினர் பலரும் தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் தனுஷ் ‘தி க்ரே மேன் என்ற புதிய ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அவென்ஜர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் ஹலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரயான் கோஸ்லிங், க்ரிஷ் ஈவனஸ் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களின் ஒருவராக நடித்து, இந்திய நடிகர்களில் இப்படிப்பட்ட ஒரு மரியாதையை பெறுவது இதுவே முதல்முறை.

ஏற்கனவே தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் திரைப்படங்களில், இதுவரை அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக தி க்ரே மேன் உருவாகியுள்ளது. இந்தப் படம் 2022 ஜுன் மாதம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Views: - 528

1

0