தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் , வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே, தன்னுடைய முதல் காதல் பற்றிய தனுஷ் மனம் திறந்து உள்ளார். அதாவது 16 வயது இருக்கும் பொழுது பள்ளியில் படிக்கும் சமயத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண் மற்றவர்களை விட வித்தியாசமாக உணர்வதாகவும் மற்ற ஆண்களைப் போல அவளை கவர நினைத்து நிறைய விஷயங்களை செய்தேன். ஒரு சமயத்தில் அந்த பெண்ணும் தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டு ஒருவருடம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. திடீரென, அந்தப் பெண் வேண்டாம் என்று என்னை தூக்கி எறிந்து விட்டார். பிறகு தான் தெரிந்தது அது காதலெல்லாம் இல்லை வெறும் கிரஷ்ஷாக இருக்கலாம் என்று நினைத்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் அது காதல் என்பதை உணர்ந்தேன். வாழ்க்கையில் நேர்மையை சிறந்தது என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.