ராயன் எதிர்பாராத வசூல்.. பிறந்த நாள் பரிசாக கோடிகளை வாரிக் கொடுக்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
29 ஜூலை 2024, 1:21 மணி
Quick Share

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வட சென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் திருப்பங்களும் ஆக உருவானது.

ராயன் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே நேரம் படத்தை பார்க்கும் ஆர்வத்திலும் பல ரசிகர்கள் முன்பதிவு செய்ததால் சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் ஹவுஸ்புல் ஆனது.

இந்த நிலையில், திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூபாய் 75.2 கோடிக்கு வசூலித்ததாக தனுஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதேசமயம், இது எனது பிறந்தநாள் பரிசு. இந்த படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கியதற்காக நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏ சான்றிதலுடன் திரைக்கு வந்து மூன்று நாட்களில் இத்தனை கோடிகள் வசூலித்த முதல் தமிழ் படம் ராயன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 238

    0

    0