தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகியது. தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பின்னர் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரித்தது.
குறிப்பாக தனுஷின் வெறித்தனமான நடிப்பு மிரட்டி எடுக்கிறது. ட்ரைலரில், நீ யாரு உனக்கு என்ன வேண்டும் என்பதை பொறுத்து நான் யார் என்பது மாறும்” என தனுஷ் பேசும் டயலாக் தேறி மாஸாக இருந்தது. அந்த ட்ரைலர் நம்பர் ஒன் ட்ரண்ட் ஆனதை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் “கொம்பரி வேட்டபுலி” என்ற ரொமான்டிக் லிரிகள் பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. 1930- 40 களில் நடந்த வரலாறு சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், இப்படத்திற்காக தனுஷ் ரூபாய் 20 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.