சென்னை தீவுத்திடலில் இசையாணி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இன்னிசையில் பாடியதோடு ரசிகர்களை இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையவிட்டனர்.
இதில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்றார். இளையராஜாவின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த தனுஷ் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து, இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‛நிலா அது வானத்தின் மேலே’ பாடலை யுவன், கார்த்திக் ராஜா உடன் இணைந்து தனுஷூம் பாடினார்.
அதோடு இந்த பாடலை தனது மகன்களை வைத்து தான் ஒரு தாலாட்டு பாடலாகவும் மாற்றி உள்ளதாக கூறி இளையராஜாவின் அனுமதியோடு இந்த பாடலின் மெட்டுக்கு ஏற்றபடி தான் உருவாக்கிய பாடல் வரிகள் கொண்டு தாலாட்டு பாடலாக பாடினார் தனுஷ். ‘கண்மூடிடு பூவிழி மானே… தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ ஆரிரோ.. நிலவோடு சேர்ந்து பனிக்காத்தும் வீச.. உன் காதில் இதமா தாலாட்டு பாட… கண்மூடிடு பூவிழி மானே தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ… ஆரிரோ… என்று மெலோடியாக பாடினார் தனுஷ். இந்த நிகழ்வு இளையராஜாவை மட்டுமின்றி அங்கிருந்த பார்வையாளர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனுஷின் திறமையை இளையராஜா கைதட்டி பாராட்டினார்.
தனுஷ் மேடையில் பாடுவதை பார்த்த அவரது மகன்கள் யாத்ராவும் லிங்காவும் கைகளை தட்டியும் சிரித்தும் மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்காக தான் தனுஷ் இந்த பாடலை பாடியதாகவும், அவர் உள்ளுக்குள் ஐஸ்வர்யாவை நினைத்து உருகுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக இருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனையடுத்து மகன்கள் இருவரும் மாறி மாறி அப்பாவிடமும் அம்மாவிடமும் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.