Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?

Author: Prasad
20 June 2025, 1:03 pm

வெளியானது குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தில் இருந்து வெளிவந்த ரசிகர்கள் பலரும் “படம் சுமாராக இருக்கிறது. ஆனால் தனுஷின் நடிப்பு அபாரம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் இத்திரைப்படத்தை குறித்து ரசிகர்கள் கூறி வரும் விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.

dhanush starring kuberaa movie twitter review

தனுஷ் பெர்ஃபார்மன்ஸ் மாஸ்

“தனுஷின் நடிப்பு பிரமாதம்” என கூறியுள்ளார் ஒருவர். ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா என பலரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர், சேகர் கம்முலாவின் எழுத்தும் இயக்கமும் சிறப்பாக உள்ளது, தேவி ஸ்ரீ பிரசாத்தின் BGM அருமையாக உள்ளது, எனினும் முதல் பாதி சற்று தொய்வாக இருப்பதாக கூறியுள்ளார்.

மற்றொருவர், “குபேரா பார்க்கக்கூடிய திரைப்படம்தான். முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் சில தருணங்கள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் படம் மிக நீளமாக இருப்பதாக உணரவைக்கிறது” என கூறியுள்ளார்.

பிரபல சினிமா விமர்சகரான ItisPrasanth “தனுஷ் போல் ஒரு நடிகர் இனி பிறந்துதான் வரவேண்டும். தேவிஸ்ரீ பிரசாத் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். சேகர் கம்முலா மிகவும் சுத்தமான மனிதர் போல. ரொம்ப மனசு நிறைந்து பார்த்த சில படங்களில் இதுவும் ஒரு படம். யோசிக்காமல் குடும்பத்துடன் டிக்கெட் புக் செய்யுங்கள். ஒரு ரூபாய் கூட வேஸ்ட் ஆகாது” என புகழ்ந்துள்ளார்.

இன்னொருவர், “கொடுத்த காசிற்கு படம் Worth. சேகர் கம்முலா ஏமாற்றவில்லை. படத்தின் விமர்சனங்கள் அருமையாக உள்ளது. மியூசிக் சூப்பர்” என கூறியுள்ளார். இவ்வாறு இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது. 

  • Fahadh faasil said no to coolie movie  எனக்கு இந்த ரோல் வேண்டாம், Bye- லோகேஷ் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்த ஃபகத் ஃபாசில்?