இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் பிறந்தவர். விண்வெளி ஆராய்ச்சித்துறையிலும் அணு ஆராய்ச்சியிலும் இவரது சாதனைகள் போற்றத்தக்கவை ஆகும். இவ்வாறு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்கவுள்ளார். “கலாம்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் நேற்று இத்திரைப்படத்தின் இயக்குனரால் வெளியிடப்பட்டது.
தனுஷ் அப்துல் கலாமாக நடிக்கும் “கலாம்” திரைப்படத்தை ஓம் ராவ்த் இயக்கவுள்ளார். இதற்கு முன் இவர் பிரபாஸை வைத்து “ஆதிபுருஷ்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளிவந்தபோது சர்ச்சைகள் பல வெடித்தன. அது மட்டுமல்லாது இத்திரைப்படம் இராமாயண கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஒரு இருக்கையை அனுமனுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த செயல் ட்ரோலுக்குள்ளாக்கப்பட்டது.
மேலும் “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மிகவும் சுமாராக அமைந்திருந்ததால் இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியையும் தழுவியது. இந்த நிலையில்தான் தனுஷின் “கலாம்” திரைப்படத்தை ஓம் ராவ்த் இயக்குவதாக வெளிவந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. “இவர் கொஞ்சம் விவகாரமான டைரக்டர் ஆச்சே” என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பழனி நகரைச் சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப…
சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்தை சோதனை செய்ய அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு…
இந்திய முழுவதும் அமிர்த நிலைய திட்டத்தின் கீழ் புனர்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு இன்று பாரத பிரதமர்…
ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து தனபாக்கியம் தம்பதிகள். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில், தங்கி வாத்து மேய்க்கும்…
ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு கோவை விமான நிலையம் வந்தடைந்த பாரதிய…
எகிறும் எதிர்பார்ப்பு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
This website uses cookies.