ஆடை குறித்து சர்ச்சை பேச்சு.. சதீஷின் விளக்க வீடியோவுக்கு தர்ஷா குப்தாவின் கோபமான பதில்..!

Author: Vignesh
11 November 2022, 9:30 am
dharsha gupta - updatenews360.jpg 25
Quick Share

தர்ஷா குப்தா தான் அப்படி பேச சொன்னார் என அந்தர் பல்டி அடித்து சதீஷ் வீடியோ வெளியிட்ட நிலையில், நானா அப்படி பேச சொன்னேன் என தர்ஷா குப்தா சதீஷை கிழித்துத் தொங்க விட்டுள்ள விசயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

சன்னி லியோன் சேலை அணிந்து ஓ மை கோஸ்ட் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு சென்னைக்கு வந்த நிலையில், அந்த ஸ்டேஜில் சதீஷ் தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டலடித்து பேசியதற்கு மூடர்கூடம் நவீன், சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் கூறிவருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில், அதற்கு விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு அடுத்த பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.

sathish updatenews360

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் எப்படி சேலை கட்டி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். நம்ம கோயமுத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி கிளாமர் டிரெஸ் அணிந்து வந்திருக்கிறார் பாருங்க என சதீஷ் தர்ஷா குப்தாவின் ஆடை பற்றி சதீஷ் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

“சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டுமென்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. actorsathish சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டுமென்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். #மாற்றமேகலாச்சாரம்” என ட்வீட் போட்டு சதீஷ் பேசியது தப்பு தான் என விளாசியுள்ளார். சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட சிலர் சதீஷின் இந்த பேச்சை கண்டித்துள்ளனர்.

chinmayi sripada - updatenews360

அத்தோடு நான் அன்னைக்கு பேசியதை எல்லாரும் தேவையில்லாமல் பெரிதாக்குகின்றனர். தர்ஷா குப்தா தான் தன்னிடம் தான் சன்னி லியோன் போல டிரெஸ் பண்ணிட்டு வரலயேன்னு ஃபீல் பண்ணி சொன்னார். அத்தோடு, அதை ஸ்டேஜில் கூற சொன்னதால் தான் அப்படி பேசினேன் என அந்தர் பல்டி விளக்கம் கொடுத்திருந்தார் நடிகர் சதீஷ்.

இவ்வாறுஇருக்கையில், சதீஷின் விளக்கத்தை பார்த்து ஷாக்கான குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நானா அப்படி சொன்னேன் சதீஷ், ஏன் இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்து என்னை அசிங்கப்படுத்துறீங்க என விளாசித் தள்ளியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது பெரிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறது.

dharsha gupta - updatenews360

சதீஷ் இந்த பிரச்சனையை என் பக்கம் திருப்பி விடுவது முறையான ஒன்றா? நான் உங்ககிட்ட அப்படி பேசுங்கன்னு சொன்னேனா? ரொம்ப விசித்திரமா இருக்கு.. யாராவது என்னைப் பத்தி ஸ்டேஜ்ல அசிங்கமா பேசுங்கன்னு சொல்வாங்களா? என நாக்கைப் பிடுங்குவது போல தர்ஷா குப்தா சதீஷை கேட்டுள்ளார்.

அன்னைக்கே நீங்க ஸ்டேஜ்ல சன்னி லியோன் உடையையும் நான் அணிந்து வந்த டிரெஸ் பற்றியும் கம்பேர் பண்ணி பேசியது என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணிச்சு, ஆனால், அப்போ அதை நான் பெருசா காட்டிக்கல.. ஆனால், இப்போ இப்படி சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை என கிழித்துத் தொங்க விட்டுள்ளார்.

dharsha gupta - updatenews360.jpg 25

அத்தோடு சதீஷ் முன்னாடியே உங்க கிட்ட பேசிட்டு இப்படியொரு பொய்யை சொல்லி இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு சதீஷை திட்டி வந்த நிலையில், தர்ஷாவுக்கே போன் செய்து சதீஷ் மன்னிப்பு கேட்டாரா என்னன்னு தெரியல, உடனடியாக தர்ஷா குப்தா சதீஷை திட்டிப் போட்ட ட்வீட்டை டெலிட் செய்துள்ளார்.

Views: - 253

0

0