சிம்புவுடன் மோதி செம அடி வாங்கிய கீர்த்தி சுரேஷ் “தசரா” திரைவிமர்சனம்!

Author: Shree
30 March 2023, 4:36 pm
dasara
Quick Share

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான நானி இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா எனும் படத்தில் நடித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருப்பதால் இப்படத்தினை தமிழ் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாண் இந்தியா படமாக உருவாகி இன்று வெளியானது, இதே நாளில் சிம்புவின் பத்து தல படம் வெளியானதால் கீர்த்தி சுரேஷின் தசரா அடையாளம் தெரியாத தூரத்தில் தூக்கடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தசரா சிம்புவுடன் மோதி ஓரளவுக்காச்சும் பார்வையாளர்களை கவர்ந்ததா? என்று இந்த திரைவிமர்சனத்தின் மூலம் பார்ப்போம்.

160 குடும்பங்கள் கொண்ட ஓர் கிராமமே நிலக்கரி தொழிலை நம்பி பிழைப்பை ஓட்டுகிறார்கள். காற்றே கருப்பாக வீசும் முழுக்க முழுக்க நிலக்கரி சூழ்ந்துள்ள அந்த கிராமத்தில் தரணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நானி மற்றும் சூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் தேக்ஷித் ஷெட்டி இருவரும் உயிர் நண்பர்களாக இருகிறார்கள்.

நண்பனுக்காக என்னவேனாலும் செய்து உயிரை கொடுக்க தயாராக இருக்கும் நானிக்கு கீர்த்தி சுரேஷ் மீது க்ரஷ், ஆனால், தன் நண்பன் கீர்த்தியை காதலிக்கிறான் என தெரிந்ததும் தன் காதலை கீர்த்தியிடம் வெளிப்படுத்த மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தன் நண்பன் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம் வரை செல்கிறது. அன்று தான் நானியும் கீர்த்தியை காதலிப்பது நண்பனுக்கு தெரியவருகிறது. பின்னர் அன்றிரவு நானியை சந்தித்து பேச நேரில் வருகிறார் நண்பன் .

ஆனால் துரதிஷ்டவசமாக நானியின் நண்பனை ஒரு கூலிப்படை கொல்கிறது. நண்பனை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள்? என்பதே மீதிக்கதை. படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் இசை படத்தை மெருக்கேற்றியுள்ளது. நானி ஆக்ஷ்ன் காட்சிகளில் லாஜிக்கை மீறி சூறாவளியாக 100 பேர் வந்தாலும் கத்தியால் குத்தி கிழிக்கும் காட்சி கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் கதையோடு ஒன்றி திரையில் பார்க்க ஓகே.

ப்ளஸ்:

கீர்த்தி சுரேஷ் , நானியின் நடிப்பு பிரமாதம்.
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையால் படத்தை கயிருப்பிடித்து இழுத்து செல்கிறார்.
கருப்பு மேகம், கருப்பு காற்று என அந்த சூழலுக்கேற்ற ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு.
.
மைனஸ்:

லாஜிக் குறைபாடுகள் அதிகமாகவே இருக்கின்றன.
இரண்டாம் பாதியில் மட்டும் சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தது.
பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் கதையோடு ஒன்றி போகவில்லை.

படத்தின் மதிப்பு:

மொத்தத்தில் நானி Natural Star என்பதை மீண்டும் ஒரு முறை தசராவில் நிரூபித்துவிட்டார். படத்தின் மதிப்பு 3/5

Views: - 687

1

0