இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி “Dhoni Entertainment Pvt Ltd” என்ற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தை அவரது மனைவி சாக்சி தோனி நிர்வகித்து வந்தார். அந்த வகையில் முதல் திரைப்படமாக தமிழில் “LGM” என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதில் ஹரீஷ் கல்யாண், இவானா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. தோனியின் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது வரை எந்த திரைப்படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவில்லை.
எனினும் தோனி சினிமாவில் நடிக்கவுள்ளதாக பலரும் கூறி வந்தனர். அந்த வகையில் தோனி மாதவனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது.
தோனி, மாதவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு “தி சேஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை வாசன் பாலா என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பாலிவுட்டில் உருவாகியுள்ளது.
இந்த டீசரை தோனி ரசிகர்கள் பலரும் ஆவலோடு பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ, இத்திரைப்படத்தின் புரொமோஷன் வீடியோவில் மட்டுமே தோனி நடித்துள்ளார், இத்திரைப்படத்தில் அவர் நடிக்கவில்லை” என கூறி தோனி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனராம். எனினும் தோனி உறுதியாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தின் டீசர் இதோ…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.