18 லட்சம் கொடுக்காமல் தயாரிப்பாளரை ஏமாற்றினாரா தல அஜித் ? கோபத்தில் வார்த்தை விட்ட தயாரிப்பாளர் !

4 February 2021, 6:57 pm
Quick Share

தல அஜித் தன்னுடன் வேலை பார்க்கும் யாரையும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அன்பாக பழகுவார். இவரின் இந்த நல்ல குணத்திற்க்காக சில விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்கும். சில விஜய் ரசிகர்கள், ” விஜய் மீது இருக்கும் அதீத அன்பினால், கடமைக்கு என்று வெறுக்கிறார்கள். சினிமா துறையில் உள்ள மற்ற பிரபலங்களும் தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக கூறுவர்.

ஆனால் வெகு சிலர், அஜித்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வார்கள், அப்படிதான் தற்போது வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், அஜித்தை தாக்கி யூ ட்யூப் சேனலில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ” அஜித்குமார் 1999 – இல் என்னிடம் தனது அப்பா அம்மா வெளிநாடு செல்ல 6 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதன் பின் ஒரு படத்திற்காக Finance – க்கு 12 லட்சம் வாங்கியதாகவும், ஆக 18 லட்சம் என்னிடம் கடன் வாங்கி ஏமாத்திட்டு ஒடிட்டான். அதுக்கு அப்புறம் அவனுக்கு மேனஜரா சுரேஷ் சந்திரா வந்தான், அவன், இவன் ( அஜித் ) கிட்ட என்ன நெருங்கவே விடல, பல முறை நடிகர் சங்கம், தயாரிப்பாளார் சங்கம்னு Complain கொடுத்துட்டேன்,

யாரும் கண்டுக்கல, இவன் ( அஜித் ) மீடியாவை Cover பண்ணிட்டான், அதனால் இவன பத்தின நல்ல செய்திகளை தான் வெளிய கேட்க முடியுது” என்று அஜித்தை மட்டு மரியாதை பேசிவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியாகி, அவர் பேசிய வீடியோவை வைத்து, “அஜீத்தின் Image போய்விட்டது, இப்போதான் அவன் உண்மையான முகம் வெளிய வருது” என்று A1 படத்தில் வரும் காமெடி காட்சி போல, வாழைபழத்தை கத்தி என்று வயிற்றில் குத்துவது போல அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். ஆனால் அஜித் ரசிகர்கள், ” இவன் யார்ரா கோமாளி” என்கிற ரீதியில் கண்டுகொள்ளாமல் வலிமை Update – க்கு காத்திருக்கிறார்கள்.

Views: - 4

0

0