பப்ளிசிட்டிக்காக தனக்குத் தானே RIP Tweet போட்டுக்கொண்டாரா மீராமிதுன்?

12 September 2020, 8:34 am
Quick Share

தன்னை தானே சூப்பர் மாடல் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் டுவிட்டரில் பப்ளிசிட்டிக்காக சர்ச்சைக்குரிய பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது தெரிந்ததே. அதிலும் டாப் 5 நடிகர்கள் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மீராமிதுன் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீராவே இந்த பதிவை பப்ளிசிட்டிக்காக அவரே செய்தாரா அல்லது யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Views: - 0

0

0