நகைச்சுவை மன்னன் நாகேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து காலத்தால் அழியாத நடிகையாக தனது முத்திரையை படைத்தார். மேலும் துணை நடிகர், வில்லனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
இதுவரை சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் போன்றே இருப்பதாக பரவலான கருத்து நிலவி வருகிறது. தமிழில் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா, சிம்பு, அஜித் வரை 5 தலைமுறை நடிகர்களுக்கும் தனது நடிப்பின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நாகேஷ். அந்த காலத்திலே B.sc பட்டப்படிப்பு படித்துள்ள நாகேஷ் கல்லூரி முடித்ததும் தனது தந்தை வேலைபார்த்த இரயில்வே துறையில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.
ஏற்கனவே நாகேஷ் குறித்து மறைந்த பிரபல எழுத்தாளர் வாலி பேட்டி ஒன்றில் நானும் நாகேஷூம் திரைத்துறையில் வந்த புதிதில் ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்கள் இருவருக்குமே பணக்கார பின்னணி கொண்ட குடும்பங்கள் தான் இருந்தது. ஆனாலும் இஷ்டப்பட்டு தான் இந்த துறையில் நாங்கள் கஷ்டப்பட்டோம். நாகேஷ் நடித்த ஒரு படம் தாமரைக்குளம். அதில் 2 காட்சிகள் மட்டுமே நடித்திருப்பான். அதற்காக அவனுக்கு கொடுத்த சம்பளம் வெறும் 90 ரூபாய் தான். இந்த சம்பளத்தை நம்பி நாகேஷ் தான் பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் வந்து சாதித்தான் என கூறியிருந்தார்.
இந்நிலையில் நாகேஷ் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. அதாவது நாகேஷ் தான் நடித்த தாமரைக்குளம் என்ற திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். கேட்டதற்கு உன் நடிப்பு சரியில்லை அதனால் பணம் கொடுக்கமுடியாது என திமிராக கூறினாராம். செய்துக்கொண்டிருந்த ரயில்வே வேலையையும் விட்டுவிட்டு இங்கு வந்தால் இவங்க சம்பளம் கொடுக்கமாட்றாங்களே என வேதனை அடைந்து அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்கே சென்றுள்ளார். ஆனால், அவரை செக்கியூரிட்டி உள்ளே செல்ல அனுமதிக்காததால் வீட்டின் பின்புறமாக சென்று சுவர் ஏறி குதித்து தயாரிப்பாளரிடம் தன் பணத்தை கேட்டுள்ளார். ஆனாலும் அவர் கொடுக்க மறுத்துவிட்டாராம். கமல் பட டயலாக் போன்று நாகேஷ் நாலு காசு சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.