வேட்டையாடு விளையாடு படத்தில் இந்த நடிகையும் வந்தாரா? படம் வெளியாகி பல வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த ரசிகர்கள்

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2021, 9:55 pm
Vettaiyadu Vilayadu Gowthami - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.இவருடைய படத்தின் தலைப்புகள் செந்தமிழில் தான் இருக்கும். இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்றை காட்டுகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருடைய சமீப கால படங்கள் AYM, ENPT மேலும் பல படங்கள் அடிக்கடி சிக்கலை சந்தித்தன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார், படம் படுதோல்வி. ரொமான்ஸில் சிறந்த படங்களை எடுத்தாலும் ஆக்சனிலும் வெற்றி படங்களை எடுத்தார். அதில் முக்கியமானது கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி என்று பலர் நடித்திருந்தனர். ஆனால், இந்த படத்தில் நடிகை கவுதமி ஒரு காட்சியில் தோன்றியதை நோட் செய்து இருக்க மாடீர்கள். ஜோதிகாவுடன் மஞ்சள் வெயில் மாலையிலே பாடலில் கௌதம் வாசுதேவ் மேனன் சில காட்சியில் தோன்றியிருப்பார். இதில் அவர் மட்டும் இல்லாமல் நடிகை கெளதமியும் சில ப்ரேம்களில் வருவார். இதை கண்டுபிடித்த ரசிகர்கள் பல இடங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

தேவர்மகன் உட்பட சில படங்களில் சேர்ந்து நடித்த கௌதமி, 2005ஆம் ஆண்டு முதல் கமலுடன் இருவரும் லிவ் இன் இல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர்.

Views: - 286

1

0