சன்னிலியோன் – தர்ஷா குப்தா ஆடை விவகாரம் : நடிகர் சதீஷின் மனைவியை பற்றி பேசிய பிரபல இயக்குநர்!!

Author: Vignesh
10 November 2022, 7:30 pm
dharsha gupta - updatenews360.jpg 25
Quick Share

ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தர்ஷா குப்தாவின் ஆடை பற்றி நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் நவீன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தனக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன்.

dharsha gupta - updatenews360.jpg 25

அந்த வகையில் தற்போது தமிழில் இவர் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. பேய் படமான இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். இப்படத்தில் நடிகை தர்ஷா குப்தா, நகைச்சுவை நடிகர் சதீஷ், பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ohmyghost - updatenews360

ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சன்னி லியோன், ஜிபி முத்து, தர்ஷா குப்தா, சதீஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். குறிப்பாக நடிகை சன்னி லியோன் பட்டுப் புடவை கட்டி வந்து இந்த விழாவில் கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

sathish updatenews360

இந்த விழாவில் நடிகர் சதீஷ் பேசும்போது, பாம்பேல இருந்து வந்திருக்கும் சன்னி லியோனே சேலை கட்டிட்டு வந்திருக்காங்க, இந்த கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா பாருங்க எப்படி வந்திருக்காங்கனு என இருவரது ஆடையையும் ஒப்பிட்டு பேசி இருந்தார். தர்ஷா குப்தா கவர்ச்சி உடை அணிந்து வந்திருந்ததை அவர் கிண்டலடித்து பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

naveen - updatenews360

அந்தவகையில் மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன், சதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தரமான பதிலடியும் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். மாற்றமே கலாச்சாரம்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 527

0

0