சமந்தா ராசியில்லாதவர்… 25 வருஷத்தில் இவ்ளோ பெரிய நஷ்டம் சந்தித்ததில்லை – தயாரிப்பாளர் புலம்பல்!

Author: Shree
30 April 2023, 7:01 pm
dil raju
Quick Share

சென்னையில் பிறந்த பல்லாவரத்து பெண்ணான நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவரின் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது. ரூ. 65 கோடி செலவில் உருவான இப்படம் வெறும் ரூ. 10 கோடி வசூல் ஈட்டி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது.

samantha - updatenews360

இந்நிலையில் இப்படம் தோல்வி அடைந்தது குறித்து முதன்மையறையாக மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, சகுந்தலம் திரைப்படம் தான் தனது 25 வருட கெரியரிலேயே மிகப்பெரிய அளவு நஷ்டத்தை ஏற்படுத்திய படம் என ஓப்பனாகவே சொல்லிவிட்டார். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.10 கோடி கூட வசூலிக்கவில்லை.

என்னுடைய 25 வருட கெரியரில் இவ்ளோ பெரிய நஷ்டத்தை சந்தித்ததில்லை என நேரடியாகவே சமந்தா ராசியில்லாத நடிகை என சொல்லாமல் சொல்லிவிட்டார். படம் ரிலீசுக்கு முன்பே ஓடிடி உரிமையை ரூ.35 கோடிக்கு விற்றுவிட்டேன். இல்லை என்றால் அது கூட கிடைத்திருக்காது என கூறினார். ஏற்கனவே சமந்தாவை வைத்து தெலுங்கில் 96 படத்தை ரீமேக் செய்த தில் ராஜு பெரும் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 422

4

3