இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் மீண்டும் இணையும் பிரபல நடிகர்..?

Author: Mari
19 January 2022, 7:19 pm
Quick Share

இயக்குனர் அட்லி, இந்தியில் நடிகர் ஷாரூக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பணிகள் முடிந்த பிறகே அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில், விஜய் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தைத் அடுத்து ‘தோழா’, ‘மஹரிஷி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இயக்குனரின் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு பிறகு, யாருடைய இயக்கத்தில் விஜய் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன், மகிழ் திருமேனி என தகவல் வெளிவந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் எதுவும் வெளியாகிவில்லை. இந்த நிலையில், விஜய்-அட்லி கூட்டணி பேச்சுவார்த்தை உறுதியானால், நான்காவது முறையாக அட்லியுடன் விஜய் இணைகிறார்.

Views: - 223

0

0