அப்பாவான வலிமை பட இயக்குனர் – எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் !

14 January 2021, 3:21 pm
Quick Share

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், கடந்த ஞாயிறு அன்று இந்த படத்தின் ஷூட்டிங் அஜித்தின் Portion மீண்டும் எடுக்க தொடங்கி உள்ளார்கள்.

‘வலிமை’ படத்தின் ஒருசில முக்கிய காட்சிகள், ஸ்டண்ட் சேஸிங் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க எச்.வினோத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த காட்சிகளை இந்தியாவிலேயே படமாக்க அவர் முடிவு செய்திருந்தாகவும், இதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

தற்போது கூட்டி கழிச்சு பார்க்கும்போது ஒரு சில சேஸிங் காட்சிகள் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தில் நடக்க இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் H. வினோத் வீட்டில் இப்போது விசேஷம் வந்துள்ளது. ஆம், இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை பட இயக்குனருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

Views: - 8

0

0