மீண்டும் அதே இயக்குனர்…தயாரிப்பு வேற: SK-வின் புது பிளான்!!

Author: Rajesh
11 October 2021, 6:45 pm
Quick Share

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் வந்து நடத்தினார்கள். ஆனால் இப்போது படக்குழு டெல்லியில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. டாக்டர் படத்தின் வெற்றியால் பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் மீண்டும் சிவகார்த்திகேயன் – நெல்சன் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 618

0

0