இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு திருமணமா? சின்ன பொண்ணா இருந்தாங்க, இப்போ இவ்வளவு வளர்ந்துட்டாங்க?

23 June 2021, 10:53 pm
Quick Share

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் தான் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி பல படங்களை இயக்கியுள்ளார்.

அதிக பொருட்செலவில் சிறப்பான படங்களை எடுப்பதால் இவரை பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுகிறார். கடைசியாக ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தற்போது கமலை வைத்து இந்தியன் 2 எடுத்து வருகிறார். ஆனால் சில பல பிரச்சினைகள் காரணமாக படம் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் ஷங்கரின் மகளுக்கு திருமணம் என இணையத்தில் செய்திகள் வரத் தொடங்கின. என்ன சங்கருக்கு எவ்வளவு பெரிய பொண்ணா என் ஆச்சரியப்படும் அளவு அவர் தனது குடும்பத்தை திரைஉலக வெளிச்சத்தில் இருந்து மறைத்து வைத்துள்ளார். 57 வயதாகும் அவருக்கு உண்மையிலேயே ஐஸ்வர்யா அதிதி என்ற இரு மகள்களும் அர்ஜித் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

இதில் அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் , பொள்ளாச்சியில் இந்தத் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணி ஓனரின் மகன் தான் மாப்பிள்ளை என்று இணையத்தில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

Views: - 362

9

3