5வது முறையாக ‘தல’அஜித்துடன் இணையும் இயக்குநர் சிவா : ராசியான V எழுத்தில் தொடரும் டைட்டில்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2021, 10:32 am
Ajith Siva -Updatenews360
Quick Share

அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துடன் 5வது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் தல அஜித். கடின உழைப்பால் தன்னிகர நடிப்பால் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்த அஜித், பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.

என்னதான் நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் பைக் ரைடராக இவர் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்றியுள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலிமை திரைப்படம் முடிந்து இவர் அடுத்து யாருடன் இணைய உள்ளார் என எதிர்பார்த்துள்ள நிலையில், மீண்டும் இயக்குநர் சிவா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என சிவாவுடன் இணைந்து 4 படங்கள் நடித்த அஜித் 5வது முறையாக இணைய உள்ளார். மேலும் ஆஸ்தான் V எழுத்தியல் படத்தின் டைட்டிலை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில் மீண்டும் தனது ஆஸ்தான இயக்குநரான சிவாவை நடிகர் அஜித் தேர்வு செய்துள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 482

0

0