“எனக்கும் பிடிக்கல, சூர்யாவுக்கும் பிடிக்கல” சூரரை போற்று குறித்து சுதா கொங்கரா ! வைரலாகும் வீடியோ !

Author: Udayaraman
1 October 2020, 6:15 pm
Quick Share

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார். மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், வரும் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது.

இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்து இருந்தார். இதை அறிவித்த பொழுது ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார்கள், தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனசை தேற்றி வருகிறார்கள்.

தற்போது நெட்ப்ளிக்ஸ் Anthologyக்காக சுதா கொங்கரா, அவர்கள் ஆணவ கொலையை பற்றி ஒரு படத்தை இயக்கியுள்ளார். அதுகுறித்து சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்தபோது, சூரரை போற்று படம் அமேசானில் வெளியாவது எனக்கு பிடிக்கலை, சூர்யாவுக்கும் பிடிக்கலை, ஆனால் என்ன செய்வது சூழ்நிலை அப்படி ” என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Views: - 70

0

0