சுசீந்திரனின் அம்மா திடீர் மரணம்: அதிர்ச்சியில் ஈஸ்வரன் படக்குழு!

15 January 2021, 4:26 pm
Quick Share


இயக்குநர் சுசீந்திரனின் தாயார் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மரணமடைந்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் இயக்குநர் சுசீந்திரன். தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, வில் அம்பு, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன் என்று பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படம் பொங்கல் தினமான நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஆனால், இந்த சந்தோஷம் இன்னும் நீடிப்பதற்குள் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி (62) திடீரென்று மரணமடைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டச்சத்திரத்தில் வசித்து வந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் காலமானார்.

சுசீந்திரனின் தாயார் திடீரென்று மரணமடைந்தது ஈஸ்வரன் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. படக்குழுவினர், படம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்பதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெயலட்சுமியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 34

0

0