“ஒவ்வொண்ணும் ‘நின்னு’ பேசும்” – காரில் அமர்ந்து கொண்டு கோக்குமாக்காக வீடியோவை வெளியிட்ட ஜீவி பிரகாஷ் பட நடிகை

Author: Udhayakumar Raman
23 March 2021, 5:22 pm
Quick Share

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர். மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர் Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றார்.

28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பேச்சிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது. அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் உண்மையானது.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றாலும் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சிறிய மேலாடை அணிந்து கொண்டு, வித விதமான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “ஒவ்வொரு போட்டோவும் நின்னு பேசுதே” என வழிந்து வருகின்றனர்.

Views: - 83

1

0