ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சை கிளப்பியவர் ஏ எல் சூர்யா. இவர் நடிகை திரிஷா என் மனைவி தான் என்று கூறி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்தது சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டது. அது மட்டும் அல்லாமல் நடிகர் விக்ரம் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜோசியத்தில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி பல பிரபலங்கள் குறித்து கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சைக்கோ தனமா நடந்துக்கொள்ளும் ஏ எல் சூர்யா, தான் திரிஷாவை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் கூறி சர்ச்சை கிளப்பினார். மேலும் த்ரிஷா தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் விஜய் அவளுடன் நடிக்க கூடாது என்றெல்லாம் ஒருமையில் திட்டி பதிவிடுவார்.
மேலும், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர், நானும் திரிஷாவும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை அதனால் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. லியோ படத்தில் இருந்து அவளை வெளியேற்றுங்கள். திரிஷாவுடன் விஜய் நெருக்கமாக நடித்தால் ஒதப்பட்டு போவார் என கிறுகிறுக்க தனமாக பேசியுள்ளார். இது தளபதி ரசிகர்களையும், த்ரிஷா ரசிகர்களையும் கோபத்திற்கு உள்ளாகியது.
தான் ஒரு இசையமைப்பாளர் என்றும் இயக்குனர் என்றும் கூறிக்கொண்டு வரும் ஏஎல் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் தரும்படி கேட்டு பத்மப்ரியாவை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருக்கிறார்.
இதையடுத்து பத்மபிரியா ஏஎல் சூர்யாவின் மீது புகார் அளித்திருக்கிறார். அப்போ பத்மபிரியா இப்போ திரிஷா என தொடர்ந்து நடிகைகளை டார்ச்சர் செய்து வரும் ஏஎல் சூர்யா கைது செய்யப்படவேண்டும் என ரசிகர்கள் கூறினார்கள்.
இந்நிலையில் திரிஷா என் உயிர், அவள் என் மனைவி அவள் சீக்கிரம் இறந்துவிடுவாள் என்றெல்லலாம் பேசிய ஏ. எல் சூர்யா தற்போது தனது கிறுக்கு மனநிலையில் இருந்து திருந்தி தான் உண்டு தன் வேலை உண்டு என வேறு ரூட்டுக்கு சென்று விட்டாராம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.