அடடா.. த்ரிஷாவுக்கு அந்த பிரச்சனையாம்.. காஷ்மீரில் இருந்து சென்னைக்கு திரும்பியதற்கு இது தான் காரணம்: படக்குழு தகவல்..!

Author: Vignesh
8 February 2023, 10:30 am
Thalapathy67Trisha_Updatenews360
Quick Share

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

அதோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

trisha - updatenews360 2

லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் மூணாறில் சில காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாத இறுதியில் படக்குழு அனைவரும், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர்.

அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படக்குழுவினருடன் நடிகை திரிஷாவும் சென்றிருந்தார். அங்கு ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leo - Updatenews360

இந்நிலையில், காஷ்மீர் சென்ற 3 நாட்களில் நடிகை திரிஷா மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். அவர் டெல்லி ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

trisha krishnan - updatenews360

இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே நாட்களில் நடிகை த்ரிஷா சென்னை திரும்பியதும், தனது டிவிட்டர் பக்கத்தில் லியோ படம் குறித்த தான் பதிவிட்டிருந்த அனைத்து டிவிட்டுகளையும் நீக்கினார். இதனால் விஜய்யின் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டதாக தகவல் கசிந்தது. மேலும் லியோ படத்தில் தனக்கு நடிப்பதற்கு ஸ்கோப்பே இல்லை என்றும் இதனால் லோகேஷ் கனகராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து கோபத்தில் வெளியேறி விட்டார் என்றும் கோலிவுட் வட்டாரத்தால் கிசுகிசுக்கப்பட்டது.

trisha krishnan - updatenews360

இந்நிலையில் நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுவதால் நடிகை த்ரிஷாவால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம் என்றும், த்ரிஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் க்ளைமேக்ஸ் காட்சிதான் தற்போது படமாக்கப்படுகிறது என்றும், இதில் த்ரிஷாவின் காட்சிகள் குறைவு என்பதாலும் அவர் காட்சிகள் முடிந்த பின்னரே சென்னை திரும்பியுள்ளார் என்றும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Views: - 293

8

2