80களில் லேடி சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா? ரஜினியை ஓரங்கட்டிய கிளாசிக் நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 6:32 pm
Rajini saridha - Updatenews360
Quick Share

சி னிமாவில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை நிறத்தை வைத்து அவர்கள் லாக்கி இல்லை என கூறுவதும் உண்டு. கருப்பாக உள்ளவர்கள் சினிமாவில் விரைவில் வெளியேறிவிடுவார்கள் என கூறுவது உண்டு.

ஆனால் அவர்கள்தான் பல ஆண்டுகள் சினிமாவை ஆட்டிப்படைப்பர் என்பது பல நடிகர்கள், நடிகைகள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது.

அந்த வகையில் ஆரம்பத்திலும் இருந்து இப்பொழுது வரை தனக்கென ஒரு அங்கீகாரத்துடன் இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

தனது ஸ்டைல் மற்றும் திறமை மூலம் இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார். அழகு சினிமாவுக்கு முக்கியமில்லை என்பதை நிரூபித்து காட்டியவர்.

அதே போல கருப்பு தேவதையாக சினிமாவில் நுழைந்து ரஜினிக்கு இணையாக பல படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர்தான் நடிகை சரிதா. என்னதான் கருப்பாக இருந்தாலும், அவ்வளவு அழகு.

அவருடைய நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினர். இயக்குநர் சிகரமாக இருந்தாலும், இமயமாக இருந்தாலும் புகழாத ஆட்களே இல்லை.

80 களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமான படங்களில் மட்டுமே நடிப்பவர். ரஜினியுடன் ஜோடியாக நடித்த நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிக்கு பாடம் புகட்ட மகன் ரஜினியை மணமுடித்துக் கொள்வார். இந்த படத்தில் இருவருக்கும் இணையான கதாபாத்திரம் இதல் சரிதாவே வென்றுள்ளார்.

தனக்கு ஜோடியாக நடிப்பவர்கள் முன்னணி நடிகராக இருக்க வேண்டும் என இவர் ஆசைப்பட்டது கிடையாது, இவருக்கு வலுவான பாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பார். ராஜேஷ், பாக்யராஜ் என அப்போது வளர்ந்து வந்த நடிகர்களுடன் ஜோடி போட்டு றெக்கை கட்டி பறந்த சரிதா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழியிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் அழகு முக்கியமில்லை, திறமைதான் முக்கியம் என சாதித்து காட்டி 80 களில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 874

71

16