“உங்களுக்கு வீட்டுக்கு போகணுமா? வின் பண்ணனுமா?” வேற லெவல் செய்த ஆஜீத் !

1 December 2020, 5:02 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாயை திறக்காமல் இருப்பதினால் ஆஜித்தை பலர் குறை சொன்னாலும், சில நேரத்தில் அவருடைய கருத்தை யாருக்கும் நோகாத படி கூறுவதில் அவர் வல்லவர் என்கிற நல்ல விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.

இப்படி இருக்கையில், கால்சென்டர் டாஸ்க்கில் ரியோவை Nominate செய்ய மனம் இல்லாமல் அந்த டாஸ்க்கை முடித்த விதமும் ஆச்சரியமாக இருந்தது. இதற்காக எல்லோரும் ஆஜித்தை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வெளியான Promo-வில் அர்ச்சனாவிடம் ஆஜித் கேள்வி கேட்கும் கால்சென்டர் நடைபெறுகிறது. இதில் “இந்த கேம் ஷோவில் நீங்கள் வரும்போது ஒரு வலிமையான போட்டியாளராக வந்தீர்கள். மேலும் இப்போது அடிக்கடி நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

ஆனால் டாஸ்க் எல்லாம் நான் பார்த்தவரைக்கும் நீங்கள் வேற லெவலில் செய்து வருகிறீர்கள். இப்போது என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உண்மையிலேயே வீட்டுக்கு போக வேண்டுமா? அல்லது இந்த ஷோவை வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜித் எழுப்பியுள்ளார். இதற்கான பதில் Show பார்த்தால் தெரியும்..

Views: - 0

0

0