விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தான் விஜய்யின் முதல் பான் – இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இதனிடையே பீஸ்ட் படம் குறித்த ரசிக்கர்களின் எதிர்ப்பார்ப்பு எகிறி வருகிறது. அதற்கு ஏற்றது போல தயாரிப்பு நிறுவனமும் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் எப்போது வரும் என ரசிகர்களின் விருப்பதை தற்போது தயாரிப்பு நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் பட ட்ரெய்லரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார். நஜிக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படம் யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்காவுடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.