தியேட்டரில் படப்பிடிப்பை தொடங்கிய சிவகார்த்திகேயன்!

Author: Udhayakumar Raman
23 March 2021, 8:54 pm
Quick Share

டான் படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் புகழ்பெற்ற திரையரங்கில் தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரது வீடுகளிலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். கடைசியாக வெளியான ஹீரோ படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட டாக்டர் படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அயலான் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக அதுவும், இன்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, பால சரவணன், முனீஷ்காந்த், காளி வெங்கட், ஷிவாங்கி, சூரி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோயம்புத்தூர் பகுதியில் நடந்து வந்த டான் பட த்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் ஓய்வில் இருந்தனர்.

இந்தப் நிலையில், தற்போது சென்னையில் டான் பட த்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதுவும், சென்னையில், பிரபலமான திரையரங்கில் டான் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் படக்குழுவினர் கோயம்புத்தூருக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 170

8

2