போதைப்பொருள் வழக்கில் மேலும் ஒரு பிரபல நடிகைக்கு தொடர்பு..? அதிர்ச்சியில் திரையுலகம்..!

14 September 2020, 4:22 pm
drug-case - updatenews360
Quick Share

போதைப் பொருள் புழக்கம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே இரு நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத போதைப் பொருள் சப்ளை விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள, அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இருவரும் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சஞ்சனா கல்ராணி இலங்கையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின் கேளிக்கை விடுதியின் கர்நாடகா ஏஜெண்ட் சேக் பாசிலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு விடுத்த சேக் பாசிலுக்கு நன்றி எனக் கூறி பிரபல நடிகை அண்ட்ரிதா ராய் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், சேக் பாசிலுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

எனவே, நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை போல அண்ட்ரிதா ராயுக்கு போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், விரைவில் அவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படாலம் என்று தெரிகிறது.

Views: - 0

0

0