ராகினி திவேதியை தொடர்ந்து மேலும் ஒரு நடிகை கைது : போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் சினிமா பிரபலங்கள்..!

8 September 2020, 1:19 pm
Sanjana_galrani_updatenews360
Quick Share

போதைப் பொருள் சப்ளை விவகாரத்தில் மேலும் ஒரு பிரபல கன்னட நடிகை கைது செய்யப்பட்டிருப்பது சினிமா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரூவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன் மற்றும் அனூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கன்னட திரைப்பட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனக்கு தெரிந்து போதை பொருட்களை பயன்படுத்தி வரும் 15 கன்னட திரையுலக பிரபலங்களின் பெயர்களை அவர் போலீசாரிடம் கூறியதாகக் கூறப்பட்டது. இது கன்னட திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், கடந்த 4ம் தேதி நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், போதைப் பொருள் புழக்கம் கொண்ட திரையுலக நட்சத்திரங்களைப் பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்கினர்.

இதனிடையே, கன்னட சினிமாவின் முன்னனி நடிகையும், நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணிக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், சஞ்சனா கல்ராணியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

போதைப் பொருள் சப்ளை விவகாரத்தில் மேலும் ஒரு பிரபல கன்னட நடிகை கைது செய்யப்பட்டிருப்பது சினிமா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0