ஈஸ்வரனுக்கு பட்ஜெட் என்னமோ ரூ.4 கோடி தான், ஆனா வசூல் இத்தன கோடிப்பே!

16 January 2021, 3:45 pm
Quick Share


சிம்பு நடிப்பில் திரைக்கு வந்த ஈஸ்வரன் படம் 2 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக ரூ.20 கோடி வரையில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிம்பு, நிதி அகர்வால், நிவேதா ஸ்வேதா ஆகியோர் பலரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ஈஸ்வரன். இயக்குநர் சுசீந்திரன் குடும்பக் கதையை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், பாரதிராஜா, பால சரவணன், ஹரிஷ் உத்தமன், அருள் தாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட், மனோஜ் பாரதிராஜா, ஸ்டண்ட் சிவா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.


திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதால், சிம்பு ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில், கொஞ்சம் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனினும், சிம்பு ரசிகர்கள், பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், மேள தாளத்துடன் ஈஸ்வரனை வரவேற்றுள்ளனர்.


முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய ஈஸ்வரன் படத்தின் முதல் பகுதி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2ஆம் பகுதியில் அதிகப்படியான எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.


இதற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வந்த குத்து, கோவில் படங்களைப் போன்று ஈஸ்வரன் படமும் இருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜைப் போன்று இயக்குநர் சுசீந்திரனும் குடும்பக் கதையை மையப்படுத்தி ஈஸ்வரன் படத்தைக் கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் வெளியான ஈஸ்வரன் படம் உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக ரூ.20 கோடி வரையில் மட்டுமே வசூல் குவித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


ஈஸ்வரன் படத்தின் என்னமோ ரூ.4 கோடி தானாம். அதையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ஈஸ்வரன் படம் ஹிட் கொடுத்து வருவது, சிம்புவிற்கும் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பத்து தல, மாநாடு ஆகிய படங்களிலும் சிம்பு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0