ஈஸ்வரனுக்கு யாரும் போகல போல: உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமா இவ்வளவு தானா?

15 January 2021, 2:45 pm
Quick Share


சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக ரூ.5 முதல் ரூ.7 கோடி வரையில் மட்டுமே வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நிவேதா ஸ்வேதா, பாரதிராஜா ஆகியோரது நடிப்பில் உருவான படம் ஈஸ்வரன். குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதியான நேற்று திரைக்கு வந்துள்ளது.


திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதால், ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இன்னும் பொங்கல் விடுமுறை நாட்கள் இருப்பதால், அடுத்தடுத்து, திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய ஈஸ்வரன் படத்தின் முதல் பகுதி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2ஆம் பகுதியில் அதிகப்படியான எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.


இதற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வந்த குத்து, கோவில் படங்களைப் போன்று ஈஸ்வரன் படமும் இருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜைப் போன்று இயக்குநர் சுசீந்திரனும் குடும்பக் கதையை மையப்படுத்தி ஈஸ்வரன் படத்தைக் கொடுத்துள்ளார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் வெளியான ஈஸ்வரன் படம் உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரையில் மட்டுமே வசூல் குவித்துள்ளது என்றும், சென்னையில் மட்டும் ரூ.20 லட்சம் வரையில் வசூலித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 7

0

0