”எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்…” – பிக்பாஸ் பாலாவின் எமோஷனல் பதிவு !

5 February 2021, 11:30 am
Quick Share

இந்த சீசன் Big Boss நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சோம், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,ஆரி, அனிதா சம்பத், அர்ச்சனா, சுசித்ரா என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு கல்யாண திருவிழா போல ஜே ஜேன்னு இருந்துச்சு.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு பிரச்சனை செய்யும், சந்தோஷத்தை கெடுக்கும் வகையில தான் வீட்டுக்குள் இருந்தார். வீட்டுக்குள் எல்லோரிடமும் வம்பிழுத்து பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினார்கள்.

இந்தநிலையில், இவரையும் சில பேருக்கு பிடித்து போக பாலாஜி இந்த நிகழ்ச்சியின் ரன்னர் ஆனார். ஆனால், வெளிய வந்த இவருக்கு, கொஞ்சம் காலம் கூட அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. திடீரென்று பாலாஜியின் தந்தை உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார்.

இந்நிலையில் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர், “வாழ்க்கையில எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், யார் என்ன சொன்னாலும், ஒரு தீர்வுதான். சரி வச்சிக்கோங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கனும்” என பதிவிட்டுள்ளார். இதை ஏன் பதில் விட்டார் என்று அவருக்கும் தெரியவில்லை அவருக்கே தெரியாததால் நமக்கும் தெரியவில்லை.

Views: - 0

0

0