நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி, இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி உள்ளனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதில், “நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்.” என பதிவிடப்பட்டிருந்தது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், சேர்ந்தும் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி அன்று இருவருக்கும் சென்னை அருகே திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரானதாக அந்த தம்பதி பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், வெறும் நான்கு மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும்? வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றனரா? அல்லது தத்து எடுத்துக் கொண்டனரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சில விதிமுறைகள் இருப்பதாகவும், அதனை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மீறியிருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இரட்டை குழந்தை தொடர்பாக நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரத்துறை மூலம் விளக்கம் கேட்கப்பட்டு அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், இது தொடர்பாக விசாரிக்கவும் மருத்துவக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வாடகைத் தாய் விவகாரத்தில், மருத்துவ விசாரணைக் குழுவிடம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.
6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்து உள்ளனர்.
இதன் மூலம் வாடகைத் தாய் விவகாரத்திற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.