VIRAL VIDEO – “எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் Engagement முடிஞ்சுடுச்சு” – நயன்தாரா – ஷாக் ஆன ரசிகர்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 8:28 am
Nayan Vignesh Shivan - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தின் இளம் நடிகர் சரண் சக்தி ( வடசென்னை தனுஷின் மச்சான் ) ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவிற்கு தற்போது 36 வயது ஆகின்றது. இந்நிலையில், Vijay tv நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்தம் முடிந்துவிட்டதாகவும், அவர் போட்ட மோதிரம் தான் இது என்று நயன்தாரா கூறும் Promo வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Views: - 946

11

0