மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நடிகர் அஸ்வின் கொடுத்த வரப்பிரசாதம் – என்ன சொல்லப் போகிறாய் படம் விமர்சனம்..!

Author: Mari
13 January 2022, 11:59 am
Quick Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின் குமார்.
புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில், நடிகர் அஸ்வீன் குமார் நடிப்பில், என்ன சொல்ல போகிறாய் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின், 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கிட்டேன், கதை பிடிக்கலனா தூங்கிவிடுவேன் எனக் கூறினார். இதனால், பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.


இந்த நிலையில், என்ன சொல்லப் போகிறாய் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு பிரபலமான FM ஸ்டேஷனின் RJவாக பணியாற்றி வர்றவர்தான் அஸ்வின். தனக்கு வரப்போற மனைவி குறித்து சில எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார். எல்லா ஆண்களுமே தனக்கு வரபோற பொண்ணு இப்படித்தான் இருக்கனும்னு ஆசப்படுவாங்க. ஆனா அப்படியா நடிக்கும்.?


அந்த சமயத்துல தான், அஸ்வின் அப்பா அவருக்கு கல்யாணம் முடிவு செய்து பொண்ணு பார்க்குறாரு. அப்படி வர்றவங்க தான் நடிகை அவந்திகா மிஸ்ரா. எழுத்தாளராக இருக்குற அவருக்கும் தனக்கு வரபோற கணவர் குறித்து சில எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதுல முக்கியமாக முன்னாடியே ஒரு பிரேக் அப் ஆகிருக்கனுமா. அப்படி சொல்லி வீட்டுல அடிவாங்கிய கணவர்கள் இங்கு ஏராளம். ஆனால், நம்ம ஹூரோவுக்கோ அப்படி எதுவும் முன்னாள் காதலியோ, காதல் கதையோ இல்லை. இந்த காலத்துல இது சாத்தியமா.. 90கிட்ஸ் அ இருந்தா அப்படி இருக்கும்… இருந்தாலும் நம்மாலுக்கு அவந்திகாவா மேல ஒரு கண்ணு. எப்படியாச்சும் கல்யாணம் பண்ணியே தீரனும் முடிவு பண்ணிட்டு, தனக்கு ஒரு காதலி இருந்தான்னு பொய் சொல்ல. அப்படி வர்றவங்கதான், தேஜு அஸ்வினி, இவங்க நாடகம் நல்ல போய்கிட்டு இருக்கு . நடிக்க வந்த பொண்ணுவும் பிடிச்சு போயிடுது ஹூரோவுக்கு. அதுக்கு அப்புறம் என்ன இந்த ரெண்டு பேர்ல யார கல்யாணம் பண்றாருன்னு தான் மீதி கதை.

படத்தின் திரைக்கதை படம் பார்க்க வந்தவங்கள தூங்க வச்சுடுது. நடிப்பு சுத்தமா வரல பாஸ். இன்னும் நீங்க நெறய நடிக்க கத்துக்கனும் பாஸ். கதை கேட்டு நீங்க தூங்குறீங்க, உங்க படத்த பார்த்த நாங்களும் இப்போ தூங்கிட்டு தான் வந்துருக்கோம் என படம் பார்த்தவர்களின் பதில்கள். காமெடின்ற பெயர்ல புகழ் பண்றது கொஞ்சம் கூட பாக்க சகிக்கல. முதல் பாதி கொஞ்சம் சுமார். இரண்டாம் பாதி.? மொத்தத்துல அஸ்வீனோட Face அடுத்த ஒரு மாத காலத்திற்கு மீம்ஸ் கிரேட்டர்களுக்கு வரபிரசாதம்.

Views: - 233

0

0