எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்: சுல்தான் 3ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு!

15 March 2021, 8:14 pm
Quick Share

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் 3ஆவது சிங்கிள் டிராக் எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்திக்கு மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சுல்தான் படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகியுள்ளது. சமீபத்தில் சுல்தான் 2ஆவது சிங்கிள் டிராக் வெளியானது. யாரையும் இவ்ளோ அழகா பாக்கல என்று தொடங்கும் அந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது சுல்தான் 3ஆவது சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. எப்படி இருந்த நாங்க என்று தொடங்கும் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை, அந்தோணி தாசன், மகாலிங்கம் மற்றும் விவேக் சிவா ஆகியோர் பாடியுள்ளனர். விவேகா பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கூறும் டயலாக்கை அப்படியே உல்டா செய்து எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம் என்று மாற்றி பாடலாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி சுல்தான் படம் திரைக்கு வரயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் பட த்தில் கார்த்தியுடன் இணைந்து நெப்போலியன், லால், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, நவாப் ஷா, ராமசந்திர ராஜூ ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

Views: - 34

3

2