குத்து, கோவிலுக்கு அப்புறம் சிம்புவுக்கு ஈஸ்வரன்: FDFS பாத்த பிரபலங்கள்!

14 January 2021, 1:22 pm
Eswaran- Updatenews360
Quick Share

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நிவேதா ஸ்வேதா, பாரதிராஜா ஆகியோரது நடிப்பில் உருவான படம் ஈஸ்வரன். குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதியான இன்று திரைக்கு வந்துள்ளது.

எனினும், திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இன்னும் பொங்கல் விடுமுறை நாட்கள் இருப்பதால், அடுத்தடுத்து, திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய ஈஸ்வரன் படத்தின் முதல் பகுதி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2ஆம் பகுதியில் அதிகப்படியான எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வந்த குத்து, கோவில் படங்களைப் போன்று ஈஸ்வரன் படமும் இருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜைப் போன்று இயக்குநர் சுசீந்திரனும் குடும்பக் கதையை மையப்படுத்தி ஈஸ்வரன் படத்தைக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஈஸ்வரன் படக்குழுவைச் சேர்ந்த நடிகை நிதி அகர்வால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் மகத் ஆகியோர் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து திரைக்கு வந்துள்ள ஈஸ்வரன் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்த மஹா படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும், பத்து தல, மாநாடு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன என்ப்து குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0