வெறித்தனமான வந்த சூர்யா40 ஃபர்ஸ்ட் லுக், அட செம்ம Title-ஆ இருக்கே.. ! இனி கச்சேரி தான்!

Author: Udhayakumar Raman
22 July 2021, 6:23 pm
Quick Share

வாடிவாசல் படத்துக்கு முன் நடிகர் சூர்யா, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ 5 மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நாளை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விருந்தாக அமையப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்கள்.

தற்போது சொன்னபடி பர்ஸ்ட் லுக்குடன் Motion Poster வந்துவிட்டது சும்மா சொல்லக்கூடாது முரட்டுத்தனமான உடற்கட்டில் சூர்யா கனகச்சிதமாக பொருந்துகிறார். படத்தின் பெயர் எதற்கும் துணிந்தவன் என்று வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கியுள்ள பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் படங்களை தயாரித்துள்ளார் சூர்யா. அதுமட்டுமில்லாமல் பசங்க 2 படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 327

4

2