தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது. தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் ரக்ஷிதா அவரை ஏற்றுக்கொள்வதாகவே தெரியவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தினேஷிடம் ரக்ஷிதா சண்டை போட்டுவிட்டு கேமராவை பார்த்து கோபமாக இவருடன் ஹவுஸ்மென்ட் ஆகவே, இருக்க முடியல இவர் கூட குடித்தனம் எப்படி பண்ணுவாங்க, விட்டுட்டு ஓட வேண்டியது தான் திரும்பி வந்துவிடாதே தாயே என ரட்சிதாவிடம் சொல்வது போல் கேமராவில் கூறி தினேஷை மிகவும் காயப்படுத்தினார்.
இதுதான் விசித்ராவின் உண்மை முகம் என சொல்லி நெட்டிசன்கள் அவரை விமர்க்க பின்னர் கமல் ஒருவருடைய திருமண வாழ்க்கை குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை. அது அந்த இருவருடைய சொந்த விஷயம் என கமலஹாசன் விசித்ராவுக்கு அட்வைஸ் செய்திருந்தார். அப்போது, அவரிடம் சாரி சார் இனிமே அப்படி பேச மாட்டேன் என்று விசித்ராவும் கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோபத்துடன் பதிவிட்டுள்ள ரக்ஷிதா, ” “இதோட நிப்பாட்டுங்க.. எல்லாரும் judge பண்றீங்க, ஆனால் என் வாழ்க்கையை யாரும் வந்து வாழ முடியாது. இது என்னுடைய battle.. நான் தனியாக போராடிக்கொள்கிறேன். எல்லாரும் உங்க வேலையை பாருங்க. எங்களையும் எங்க வேலை பார்க்க விடுங்க” என கோபமாக பதிவிட்டு ரக்ஷிதாவை எச்சரித்து இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.