தன்னுடைய சினிமா கெரியரில் இதுதான் கடைசி படம் என கூறிவிட்டு நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் தளபதி 69. இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருக்கிறது.
இந்த திரைப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். மேலும் இந்த திரைப்பட. இந்த திரைப்படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என முன்னதாக அறிவித்துவிட்டார்கள். இந்த படத்தை முடித்த கையோடு விஜய் முழு நேர அரசியல் ஈடுபட இருக்கிறார்.
அதன் பிறகு விஜய் சினிமா பக்கமே தலை காட்ட மாட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் மும்முரமாக நடித்த வருகிறார். அந்த வகையில் படத்தின் படப்பிடிவுகள் மற்றும் பட வேலைகள் அடுத்தடுத்து தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் இப்படத்தின் படக்குழு இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 1 முதல் மாலை 5 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னதாக அறிவித்ததன் படி தற்போது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல் நடிக்க கம்மிட் ஆகியிருப்பதாக போஸ்டர் உடன் கூடிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: பீச்சில் முட்டி போட்டு ப்ரோபோஸ்… 4-வது திருமணத்தை தேதியுடன் அறிவித்த வனிதா!
முன்னதாக இந்த திரைப்படத்தில் நடிகை மமீதா, பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் வரிசையாக நடிக்க கமிட் ஆகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் பாபி தியோல் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் இப்படி ரகரகமாக இறக்கினால் எப்படி? படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்க செய்யுறீங்க என கமெண்ட் செய்து மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
0
0