தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடிக்க வெளியான இப்படம் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்தது.
குறிப்பாக இப்படத்தில் நடிகை சமந்தா ஆடிய ஸ்பெஷல் ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அந்த பாடல் இப்போதும் ஹிட் லிஸ்டில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்ப்போது மும்முரமாக தயாராகி வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த அவளோடு காத்திருக்கின்றனர்.
முன்னதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமந்தாவின் நடனம் புஷ்பா 2 படத்தில் இல்லை என செய்தி வெளியானது. ஆம், இந்த முறை சமந்தாவிற்கு பதில் “குண்டூர் காரம்” படத்தில் நடித்த ஸ்ரீலீலா தான் புஷ்பா 2 ஐட்டம் டான்ஸ் ஆடுகிறாராம். அதற்காக அவருக்கு ரூ. 2 கோடி ருபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
முன்னதாக, புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அல்லு அர்ஜுன் புடவையில் மேக்கப் போட்டு தயாராகிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று கசிந்து சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. Gangamma Thalli லுக்கில் இருக்கும் அல்லு அர்ஜுனின் இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்நிலையில், புஷ்பா 2 படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் பகத் பாசில் புஷ்பா 2 படத்திற்காக ஒரு நாளைக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாம். புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் பல நாட்கள் எடுத்த நிலையில், ஒருநாள் சம்பளம் முறைகளுக்கு பகத் பாசில் மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.