ஒரே நிகழ்ச்சி, ஓஹோன்னு வாழ்க்கை: புகழுக்கு விருது கொடுத்த 3 பியூட்டீஸ்: வைரலாகும் புகைப்படம்!

7 March 2021, 10:05 pm
Quick Share


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழுக்கு தொலைக்காட்சியில் சிறந்த எண்டர்டெயினர் என்பதற்கான Behindwoods Gold Icons Award விருது வழங்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சிரிப்புடா என்ற ரியாலிட்டி ஷோ மூலம் அறியப்பட்டவர் புகழ்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு தன்னை ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், மிமிக்கிரி ஆர்டிஸ்டாகவும் நிரூபித்துக் கொண்டார்.


Cooku With Comali நிகழ்ச்சியின் முதல் சீசனில் குக்காக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் மற்றும் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் இருவரது கெமிஸ்டரி இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, Cooku With Comali நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக புகழ் வலம் வருகிறார்.

இந்நிகழ்ச்சியில், காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு புகழின் செயல் இருந்து வருகிறது. அதோடு, ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கிறது.
இவ்வளவு ஏன் ஷிவாங்கி மீது புகழ் காட்டும் அன்பிற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

இப்படி தனது பெயருக்கு ஏற்றவாறு புகழின் உச்சிக்கு சென்ற புகழ் தற்போது சொந்தமாக கார் வாங்கியுள்ளார். காரின் எண் TN 85 P 0833 என்று பதிவும் செய்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர், பாடகிகள், காமெடியன்கள், குணச்சித்திர நடிகர், நடிகைகள் என்று ஏராளமான கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.


அந்த வகையில், இந்த ஆண்டு முதல் முறையாக Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை வழங்குகிறது. இந்நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகள் மற்றும் குக்குகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக புகழ் தொகுத்து வழங்கியுள்ளார். அதே கையோடு, புகழுக்கு தொலைக்காட்சியில் சிறந்த எண்டர்டெயினர் என்பதற்கான Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது.


இந்த விருதை அவரது குக்குகளான 3 ஏஞ்செல்ஸ் தர்ஷா குப்தா, பவித்ர லட்சுமி மற்றும் ரித்விகா ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 649

1

0