தவெகவுக்கு தாவும் பிரபல நடிகை? பாஜகவுக்கு டாட்டா காட்டுகிறாரா?

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 12:58 pm

தற்போது பாஜகவில் உள்ள பிரபல நடிகை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி மூலம் முன்னணி நடிகையாக முன்னேறியவர் நடிகை நமீதா. அஜித், விஜய், சரத்குமார், அர்ஜூன் என பல நடிகர்களோடு நடித்து உச்சம் தொட்டார்.

திருமணத்திற்கு பின் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த நமீதா கடைசியாக 2020ல் வெளியான மியா படத்தில் நடித்திருந்தார்.

2016ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நமீதா, 2019ஆம் ஆண்டு ராதாரவியுடன் பாஜகவில் இணைந்தார்.

தற்போது தமிழக பாஜகவின் மாநில செயற்குழுவில் உள்ள நமீதா, கட்சி தாவ முடிவெடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை வெளுத்து வாஙகும் நமீதா, தற்போது புதியதாக விஜய் ஆரம்பித்துள்ள தவெகவில் இணைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

பாஜகவில் அண்மைக்காலமாக பிரச்சாரத்திற்கு மட்டுமே நமீதாவை பயன்படுத்தி வரும் நிலையில் அவர் கட்சி தாவ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த நமீதா, அதெல்லாம் கட்டுக்கதை, முதலில் வீர வசனம் பேசும் விஜய், செயலில் காட்ட வேண்டும் என கூறியுள்ளார்,

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 211

    0

    0